வடக்கு கிழக்கு பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1,37,529 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நவீன துரித வீட்டுத் திட்டக் கட்டுமானப் பணிகளுக்கான ஆர்வலர்களிடமிருந்து திட்டக்கோரலுக்கான பத்திரங்களை நிதியிடல் வசதியுடன் பெற்றுக் கொள்ள புனர் வாழ்வளிப்பு மீள் குடியேற்றம் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வடக்கு கிழக்கு பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக வீடுகளை அமைப்பதனை நல்லிணக்கக் குழு வலியுறுத்தியிருந்தது.
இதன் படி இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 44000 வீடுகளுக்கான திட்டம் நடைமுறையில் இருந்த போதிலும் இதற்கு மேலதிகமாக மாவட்ட செயலாளர்களின் கணிப்பின் படி தேவையான வீடுகளின் மொத்த எண்ணிக்கை 1,37, 529 ஆகும்.
அதன்படி அமைச்சர் சுவாமி நாதனின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.