புகையிரத திணைக்களத்தினால் யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பிற்கும் கொழும்பு புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கும் இடையிலான நான்கு புகையிரத சேவைகளின் நேர அட்டவணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் திங்கட்கிழமை தொடக்கம் மாற்றம் அடையவுள்ளதாக புகையிரத திணைக்களத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் உத்தரதேவி கடுகதி புகையிரதம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்டு கிளிநொச்சி புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட்டு வவுனியா புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை பிற்பகல் 1.05 மணிக்கு சென்றடையும்.
இதேவேளை காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்படும் யாழ்தேவி புகையிரதம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு கிளிநொச்சி புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு வவுனியா புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து முற்பகல் 10 மணிக்கு புறப்பட்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை பிற்பகல் 4மணிக்கு சென்றடையும்.
இதேவேளை காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் குளிரூட்டப்பட்ட கடுகதி புகையிரதம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து பிற்பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு கிளிநொச்சி புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து பிற்பகல் 2.38 மணிக்கு புறப்பட்டு வவுனியா புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை இரவு 8 மணிக்கு சென்றடையும்.
யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் தபால் புகையிரதம் கிளிநொச்சி புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து 8.28 மணிக்கு புறப்பட்டு வவுனியா புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் இருந்து முற்பகல் 10 மணிக்கு புறப்படும் மாத்தளை புகையிரதம் கிளிநொச்சி புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து முற்பகல் 10.55 மணிக்கு புறப்பட்டு வவுனியா புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து பிற்பகல் 12.20 மணிக்கு புறப்பட்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை மாலை 6.20 மணிக்கு சென்றடைந்து அங்கிருந்து மாத்தளை புகையிரத நிலையத்தை இரவு 9.40 மணிக்கு சென்றடையும்.
இதேவேளை கல்கிசை புகையிரத நிலையத்தில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் குளிரூட்டப்பட்ட கடுகதி புகையிரதம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து 5.45 மணிக்கு புறப்பட்டு வவுனியா புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து முற்பகல் 10மணிக்கு புறப்பட்டு கிளிநொச்சி புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து முற்பகல் 11 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து முற்பகல் 11.50 மணிக்கு புறப்பட்டு காங்கேசன்துறை புகை யிரத நிலையத்தை பிற்பகல் 12.15 மணிக்கு சென்றடையும்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்படும் யாழ்தேவி புகையிரதம் வவுனியா புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து முற்பகல் 11.45 மணிக்கு புறப்பட்டு கிளிநொச்சி புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலை யத்தை சென்றடைந்து அங்கிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்பட்டு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை பிற்பகல் 3.15 மணிக்கு சென்றடையும்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து முற்பகல் 11.50 மணிக்கு புறப்படும் உத்தரதேவி புகையிரதம் வவுனியா புகையிரத நிலையத்தை சென்றடை ந்து அங்கிருந்து பிற்பகல் 4.25 மணிக்கு புறப்பட்டு கிளிநொச்சி புகையிரத நிலை யத்தை சென்றடைந்து அங்கிருந்து பிற்பகல் 5.23 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை மாலை 6.45 மணிக்கு சென்றடையும்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் தபால் புகையிரதம் வவுனியா புகையிர நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து அதிகாலை 2.10 மணிக்கு புறப்பட்டு கிளிநொச்சி புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து அதிகாலை 3.35 மணி க்கு புறப்பட்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை காலை 6.05 மணிக்கு சென்றடையும்.
இதேவேளை சனிக்கிழமைகளில் மட்டும் மாத்தளை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 6.20மணிக்கு புறப்படும் மாத்தளை புகையிரதம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து காலை 9.40மணிக்கு புறப்பட்டு வவுனியா புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து பிற்பகல் 4.50 மணிக்கு புறப்பட்டு கிளிநொச்சி புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து பிற்பகல் 5.55 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை மாலை 6.55 மணிக்கு சென்றடையும் என புகையிரத திணைக்கள நேர அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.