ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் வெளியிட்ட விசாரணை அறிக்கையையும் அதன் பரிந்துரைகளையும் போரை நடத்திய இராணுவத் தளபதியான சரத்பொன்சேகா வரவேற்றுள்ளார்.
அத்துடன் நீதியை நாட்டப்படுவதற்கான செயற்பாடுகளுக்கு தான் முழுமையான ஆதரவை வழங்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு உதவவேண்டும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். இந்த நாட்டு மக்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும், இந்த பரிந்துரைகள் குறித்து நாங்கள் தேவையற்ற விதத்தில் பதட்டம் அடைய வேண்டிய தேவையில்லை.
நாட்டின் நற்பெயரைக் காப்பாற்றுவதற்காக எங்களால் இந்த விடயங்களிற்கு சுமூகமான முறையில் தீர்வைக் காணமுடியும் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டமை, ரவிராஜ் படுகொலை, பிரகீத் விவகாரம் போன்றவை நான் இராணுவ தளபதியாக பதவி வகித்த காலப்பகுதியிலேயே இடம்பெற்றன.
ஆனாலும் எனக்கு இது குறித்துத் தெரியாது. இராணுவத்தினரும், படையினரும் சட்டஅமுலாக்கல் பிரிவினர் என்ற வகையில் இதற்கு பொறுப்பேற்கவேண்டும். சந்தேகங்களைக்களையும் நிலையில் படைதரப்பு காணப்படவேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.