5 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்யக் கோரி நடைபெற்ற ஆரப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
திவுலப்பிட்டிய நகரில் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பொலிஸ் அதிகாரி திவுலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட பொலிஸ் அதிகாரி, அழுத்கமை, யக்கல பிரதேசத்தில் வசிக்கக்கூடிய 34 வயதுடையவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.