Ad Widget

சிலியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8.3 ஆக பதிவு, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது

சிலி நாட்டின் வடக்கு கடலோரப்பகுதியான இலாபெல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 8.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அலறியடித்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவியலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டது, கட்டிடங்கள் ஊசலாடியது போன்று குலுங்கின. இரவு நேரம் என்பதால், செய்வதறியாது திகைத்த மக்கள் பீதியில் உறைந்தனர்.

strong-quake-shakes-Chile-some-tsunami

சில இடங்களில் கடல் அலைகள் சீறின.சிலியின் அண்டை நாடுகளான மெக்சிக்கோ, பெரு மற்றும் ஹவாய் போன்ற நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிலி நாட்டின் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடான அர்ஜெண்டினாவின் தலைநகரிலும் உணரப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். சிலியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு பிறகு ஏற்பட்ட சுனாமியில் தெற்கு மத்திய நகரான கான்செப்சியன் நகரில் நுற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதற்கு பிறகு 4 முறைக்கும் மேலாக ரிக்டர் அளவில் 6 க்கும் மேலாக பதிவான பின் அதிர்வுகள் சிலியில் ஏற்பட்டுள்ளன.

வீடுகள் சிதைந்து கிடக்கும் காட்சிகளையும் கடல் அலைகள் பெருமளவில் சீறுவதையும் சிலி நாட்டைச்சேர்ந்த தொலைக்காட்சி ஊடகங்களில் காண்பித்து வருகின்றன. இந்த நிலநடுகத்தால் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையான தக்வல் இன்னும் வெளியாகவில்லை. 30 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

சிலியில் கடந்த 1906ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவாகியிருந்தது. அதன்பின் தற்போது தான் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts