சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் கடந்த் 14 ந்தேதி தொடங்கியது.ஐநா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை வருகிற 16-ம் தேதி புதன்கிழமை முதல் பொதுப் பார்வைக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஐநா மனித உரிமைகள் ஆணையர் சயித் அல் ஹுசைன் இன்று அறிக்கையை வெளியிட்டார்
அதில் கூறபட்டு உள்ல முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* போர்க்காலத்தில் இலங்கை ராணுவமும் விடுதலைபுலிகளும் போர் மீறலில் ஈடுபட்டு உள்ளன.
* சர்வதே நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும்.
* போர்க்குற்ற்ம் குறித்து உள் நாட்டு விசாரணை உகந்தது அல்ல.
* இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவது அவசியம்.
* போர் நடந்த காலம் இலங்கையின் இருண்ட காலம் ஆகும்.
* இலங்கையின் நீதித்துறை போர்க்குற்றம் குறித்து இதுவரை விசாரிக்க தயாரில்லை.
* இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ள வேண்டும்.
* தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் மீது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் – சில தருணங்களில் மிக மோசமானதாக மேற்கொள்ளப்பட்டன