24 மணிநேரமும் முறையிடலாம்

சிறுவர்கள் மற்றும் மகளிருக்கு எதிராக நடைபெறும் துஷ்பிரயோகம் தொடர்பாக முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணிநேர சேவை, முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம், சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை 1929 என்ற இலக்கத்துக்கும் மகளிருக்கு எதிரான துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை 1938 என்ற இலக்கத்துக்கும் அழைப்பை ஏற்படுத்தி முறையிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் இந்த சேவையானது காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாத்திரமே செயற்பட்டதாகவும் தற்போது இந்த சேவை 24 மணித்தியாலமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts