நடிகர் எஸ்.வி.சேகருக்கு கொலை மிரட்டல்!! “போர்க்களத்தில ஒரு பூ” தடை காரணமா??

நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை மயிலாப்பூரில் வசிக்கிறார். திரைப்பட தணிக்கை குழு உறுப்பினரான அவர் நேற்று மயிலாப்பூர் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

sv-sekar

அந்த புகார் மனுவில், தனக்கு செல்போனில் கொலை மிரட்டல் வந்துள்ளதாகவும், சில மர்ம நபர்கள் தனது வீட்டுக்கு வெளியில் நின்று கண்காணிப்பதாகவும், இது தொடர்பாக உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி எஸ்.வி.சேகர் வீட்டுக்கு நேற்று இரவு முதல் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சினிமா தணிக்கை பிரச்சினையில் இந்த கொலை மிரட்டல் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அண்மையில் இசைப்பிரியா பற்றிய ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்துக்கு தணிக்கை குழுவின் தலைவராக இருந்த எஸ்.வி.சேகரும், தமிழ்நாடு தணிக்கை குழு அதிகாரி பழனிச்சாமியும் படத்தை பார்த்துவிட்டு, அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இசைப்பிரியா பற்றிய கதை ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்துக்கு தடை!

Related Posts