பாகுபலி: சீனாவில் 5000 திரையரங்குகளில் வெளியிட முடிவு

ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘பாகுபலி’. ரூ.250 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் வெளியான சில நாட்களிலேயே 500 கோடி ரூபாயை எட்டி வசூலில் புதிய சாதனை படைத்தது. இதில் ராணா, பிரபாஸ், அனுஷ்கா, தமனா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

a-hollywood-remake-for-baahubali-1

உலகம் முழுக்க பல நாடுகளில் வெளியான இப்படம் விரைவில் சீனாவிலும் வெளியாக உள்ளது. சீனாவில் கிட்டத்தட்ட 5000 திரையரங்குகளில் ‘பாகுபலி’யை வெளியிட திட்டமிட்டுள்ளது ‘இ.ஸ்டார்’ நிறுவனம். இந்திய அளவில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமை தற்போது தக்கவைத்துக் கொண்டிருப்பது ராஜமௌலியின் ‘பாகுபலி’ திரைப்படம் தான். சீனாவிலும் இது போன்று சாதனை செய்யுமா என்று விரைவில் தெரிந்துவிடும்.

Related Posts