இலங்கையில் பெரசிடமோல் விற்பனை எண்ணிக்கைக்கு இணையாக பாலியல் ஊக்கி மாத்திரை விற்பனை!!

பாலியல் ஊக்கி வில்லைகள் இலங்கையில் அதிகளவில் விற்பனையாவதாக தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவிக்கின்றது.

வருடாந்தம் 20 மில்லியனுக்கும் அதிகமான வில்லைகள் இங்கு விற்பனையாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவ ஆலோசனையின்றி , பெரசிடமோல் விற்பனை எண்ணிக்கைக்கு இணையாக இவை விற்பனையாவதாகவும் அச்சபையின் தலைவர் தெரிவிக்கின்றார்.

நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இம்மாத்திரை உள்ளெடுக்கும் போது மரணம் சம்பவிக்கும் சாத்தியமும் இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இத்தகைய மரணங்கள் இலங்கையில் அண்மைக்காலமாக இலங்கையில் அதிகமாக பதிவாகிவருகின்றது. அண்மையில் மாரவில பிரதேசத்தில் 52 வயதான நபரொருவர் உயிரிழந்த சம்பவத்தின் போது அவரது காற்சட்டை பையிலிருந்து ஊக்கி மாத்திரை கண்டுபிடிக்கப்பட்ட தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts