மோட்டார் வாகனங்களுக்குரிய அனைத்து ஆவணங்களும் சமர்ப்பித்தால் மட்டுமே புகைப்பரிசோதனை செய்யப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட் டம் கடந்த வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது, புகைப்பரி சோதனை என்றால் என்ன என்ற தெளிவு பலரிடம் இல்லை. புகைப்பரி சோதனை செய்துகொள்ள வரும் பொதுமக்கள் சிலர் வாகன இலக்கத்தகடு, வாகன புத்தகம் இல்லாமல் வருகின்றார்கள். அத்துடன் வாகன பரிமாற்று பத்திரம் பெற்றுக் கொள்வதில் காலதாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என மோட்டார் வாகன புகைப் பரிசோதக அதிகாரி ஒருவரால் கருத்து தெரிவிக்கப்பட்டது.
அதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச தனியார் மற்றும் இராணுவ வாகனங்கள் அனைத்தும் புகைப் பரிசோதனை மேற்கொள்ளுதல் வேண்டும்.
வாகன பரிமாற்று பத்திரம், இலக்கத்தகடுகள் காலதாமதமாகுவது படிப்படியாக நிவர்த்திசெய்யப்படும் அவற்றை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்பரிசோதனை செய்யப்படும் இடத்தில் அது தொடர்பான விளக்கமும் நிபந்தனைகளும் கட்டாயம் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.