உலக சிறுவர் தின நிகழ்வு இம்முறை யாழ்ப்பாணத்தில்! – அமைச்சர் விஜயகலா

உலக சிறுவர் தின நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என்று சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

vijayakala-kala-makeswaran

சில மாதங்களுக்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் சிறுவர் தின நிகழ்வுகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டது. வித்தியா என்ற பாடசாலை மாணவியின் மரணம், வடக்கில் இடம்பெற்று வரும் அதிகளவான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் போன்ற காரணிகளினால் பிரதேச சிறுவர் சிறுமியரை தெளிவுபடுத்த உலக சிறுவர் தின நிகழ்வுகளை ஓர் சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் மேற்கொள்ளும் முதலாவது நிகழ்வாக உலக சிறுவர் தின நிகழ்வுகளை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யும் பணி அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts