இராணுவ வீரர்களின் குருதியில் ஐக்கியப்பட்ட நாட்டை பிளவுபடுத்த இடமளியேன்!

இராணுவ வீரர்களின் குருதியில் ஐக்கியப்படுத்தப்பட்ட நாட்டை பிளவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இராணுவ வீரர்கள் பாரிய அர்ப்பணிப்பு, அறிவு, அனுபவம், தெளிவு போன்றவற்றை அன்று வழங்கியிருக்காவிட்டால் நாடு இரண்டாக பிளவுபட்டிருக்கும் என அவர் கூறினார்.

அந்த பாரிய அர்ப்பணிப்பை மறப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நமக்காக நாம் திட்டத்தின் கீழ் கண்டி மாவட்ட இராணுவ வீரர்களுக்கு அமைக்கப்பட்ட 100 வீடுகளை ஒப்படைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Posts