முதலமைச்சர்க்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது – சிவாஜிலிங்கம்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுப்பது, என்ற பேச்சுக்கே இடமில்லையென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கு விரோதமாக செயற்பட்டால் மாத்திரமே கூட்டமைப்பால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அவ்வாறான எந்தத் தவறையும் அவர் செய்யவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘வடமாகாண முதலமைச்சர் மீது, தமிழ் மக்கள் பாரிய நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில், 5 வருடங்களுக்குள் முதலமைச்சர் தனது சேவையை மக்களுக்கு செய்வதற்கு எவரேனும் தடையாக இருந்தால், மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்றார்.

Related Posts