தேசிய அரசாங்கத்தின் பிரதியமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று புதன்கிழமை (09) சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட இரு பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை மாற்றிக்கொண்டுள்ளனர்.
சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிமல் லன்ஸாவும் உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சராக பதவியேற்றுக்கொண்ட அருந்திக்க பெர்னாண்டோவும் தங்களுடய அமைச்சுப் பதவிகளை மாற்றிக்கொண்டுள்ளனர்.
இதற்கமைவான, உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சராக நிமல் லன்ஸாவும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதியமைச்சராக அருந்திக பெர்னாண்டோவும் பணியாற்றவுள்ளனர்.