மயக்கமடைந்த நிலையில் அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக சிகிச்சைக்கு உட்படுத்தப்படாது காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று காரைநகர் வைத்திசாலையில் இடம் பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருந்த வேளையில் பந்தைப் பிடிக்க ஒடிச்சென்ற வேளையில் இருவர் மோதிக்கொண்டதில் ஒருவர் மயக்க மடைந்துள்ளதுடன் அவருடைய கையும் முறிவடைந்துள்ளது.
உடனடியாக காரைநகரில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அங்கு வைத்தியர் கடமையில் இருக்கவில்லை.வைத்தியருடைய விடுதிக்கு சென்ற போதிலும் விடுதியிலும் வைத்தியர் இல்லாத நிலமையே காணப்பட்டுள்ளது.
இதனால் செய்வது அறியாது வைத்தியசாலை ஊழியாகளும் பொது மக்களும் திண்டாடிய நிலையில் இரவு 8.30 மணியளவில் வைத்தியசாலைக்கு வந்த வைத்தியர் உடனடியாக பாதிக்கப்பட்ட நோயாளரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் மேலதிக சிகிச்சைக்காக என அனுப்பி வைத்துள்ளார்.
இவ்வாறு காயத்திறக்க உள்ளாகியவர் காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த சுப்பிரமணியம் செந்தூரன் வயது 21 என்பவராகும்.
அவசரமாக கொண்டு செல்லப்பட்ட நோயாளி ஒருவருக்கு ஒரு முதலுதவி சிகிச்சை கூட செய்யப்படாததையிட்டு பொது மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளார்கள்.