சுன்னாகம் இணுவில் பகுதிகளில் மீண்டும் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் ஆரம்பித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாகவே இச்சம்பவம் இடம் பெற்று வருகின்றது.
கடந்த சனிக்கிழமை இரவும் இளைஞர்குழுக்கள் பகிரங்கமாக வாள்கள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களுடன் நடமாடியதாகவும் பொலிஸார் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரியவருகிறது.
மேலும் இச்சம்பவத்தினால் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் அச்சத்துடன் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவங்கள் குறித்து பொலிஸாரின் நடவடிக்கை குறைவாகக் காணப்படுவதே இந்த நிலைமைகள் அதிகரிக்கக் காரணம் என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.