புதிய அரசாங்கத்தின் பிரதியமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமான நிகழ்வுகள் பெரும்பாலும் நாளை இடம்பெறலாம் என அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் 45 பேர் பதவிகளை ஏற்றுக்கொள்ளவுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டது.
அன்றைய தினம் சத்தியப்பிரமாணம் மேற்கொண்ட 42 பேருடன் இதுவரை 43 பேர் பதவிகளை ஏற்றுக்கொண்டார்கள்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஏற்கனவே, சத்தியப்பிரமாணம் மேற்கொண்டிருந்தார்.
இந்த எண்ணிக்கையில் சிறிலங்கா சுதந்திர கட்சியைச் சார்ந்த 11 பேரும் உள்ளடங்குகின்றனர்.
48 அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் 45 பிரதியமைச்சர்களை நியமிப்பதற்கே நாடாளுமன்றத்தில் அனுமதி கிடைத்திருந்தது.
இதன்படி மேலும் 4 அமைச்சர்கள் பதவிகளை ஏற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது