இராணுவத்தை தண்டிக்க முனைந்தால் சம்பந்தனின் பதவியைப் பறிபோம்! – எஸ்.பி.திஸாநாயக்க

எதிர்க்கட்சித் தலைவர் பதவி, இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டமை சரியானதே என்றாலும், சம்பந்தனின் செயற்பாட்டிற்கு அமைய அவரை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வழியுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறிப்பாக போர்க்குற்றம் சுமத்தி இராணுவத்தினரை தண்டிக்க மற்றும் தனி அரசை உருவாக்க முயற்சித்தால், தேசிய நலன் கருதி அவரை பதவி விலக்கி வேறொருவரை நியமிக்கும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Related Posts