ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயன்படுத்திய இல்லம் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவுக்கான உத்தியோகபூர்வ இல்லமாக வழங்கப்பட்டுள்ளது.
அந்த வீட்டில் திருத்த வேலைகள் சில இருப்பதனால் மஹிந்த ராஜபக்ஷ இன்னமும் அங்கு குடியேறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு விஜயராம மாவத்தை உள்ள வீடு ஒன்றே முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வமாக கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.