நாட்டில் ஜனநாயகம் மலர்ந்திருந்தாலும் தமிழ் மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை

நடைபெற்று முடிந்த தேர்தலின் பின்னர் ஜனநாயகம் மலர்ந்திருந்தாலும், தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதுவும் நடக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அமெரிக்க மேல் மாகாண செனட் சபை உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

யாழிற்கு நேற்று வெள்ளிக்கிழமை 6 பேர் கொண்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

அந்த கலந்துரையாடலின் பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஜனவரியின் பின்னரான மாற்றத்தினை எவ்வாறு எதிர்பார்க்கின்றீர்கள் என அமெரிக்க மேல் செனட்சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு தான் பதிலளிக்கையில், மாற்றம் ஏற்பட்டமை நல்ல விடயம் என்று கூறியதாகவும் முதலமைச்சர் கூறினார்.

நூட்டினை முழுமையாக பார்த்தால் ஜனநாயக ரீதியில் நன்மையை தந்துள்ளது. தனிப்பட்ட வகையில், தமிழ் மக்களின் நலனுக்காக பார்த்தால் நன்மை தந்தாக தெரியவில்லை.

யாழ்.மாவட்டத்தில் இருந்து இராணுவத்தினை வெளியேற்றுவது தொடர்பில் எந்தவித கருத்துக்களையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை.

இராணுவம் யாழ்.மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். அதேநேரம் 64 ஆயிரம் ஏக்கர் காணியில் 1000 ஏக்கரை மட்டும் மக்களுக்கு விடுத்துள்ளனர்.

ஊள்ளக விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றீர்களாக என செனட் உறுப்பினர்கள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

அதற்கு அவர் ஆம், உள்ளகவிசாரணையினை நாங்கள் எதிர்க்கின்றோம். அனைத்து தமிழ் மக்களும் சர்வதேச விசாரணையினை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

Related Posts