Ad Widget

சர்வதேச நீதி வேண்டி மக்கள் செயற்பாட்டு அமைப்பு உதயம்!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறையினை வலியுறுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பொது வேலைத்திட்டம் சம்பந்தமாக வெகுஜன அமைப்புகள் மக்கள் பிரதிநிதிகள் பல்கலைக்கழக சமூகம் ,ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களிடையேயான கலந்துரையாடல் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் திருநெல்வேலியில் இன்று (2) மாலை இடம்பெற்றது.

tnpf

கலந்துகொண்டவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அதற்கான மக்கள் அமைப்பு ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.முன்னணி செயற்பாட்டாளரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை தலைமை ஒருங்கிணைப்பாளராக கொண்டு பேராசிரியர் சிவநாதன் தலைமையில் மக்கள் செயற்பாட்டு அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அதற்குரிய செயற்பாட்டுக்குழு தெரிவு செய்யப்பட்டு கலந்து கொண்டவர்கள் விருப்பின் அடிப்படையில் ஆரம்ப உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர். செயற்குழுவில் வடக்கு கிழக்கு மற்றும் ஏனைய பிரதேச தமிழ் மக்கள் அமைப்புகக்களின் பிரதிநிதிகள் உள்வாங்கப்படுவதற்கும் அனுமதி அளிக்கபட்டது.  நாளை (3) காலை 11 மணிக்கு ஊடகவியலாளர் மாநாட்டில்  அதன் இலக்கு செயற்பாடுகள் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது .

Related Posts