மத்தல சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தற்போது பதற்றமான நிலைமையொன்று காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை நெற்களஞ்சியசாலையாக மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்துக்கு எதிராக, விமான நிலைய சேவையாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நெல் மூட்டைகளுடன் முதலாவது லொறி, மத்தல விமான நிலையத்தை இன்று புதன்கிழமை (02) காலை அடைந்தபோதே இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் மாத்திரம் 20 கோடி ரூபாய் பெறுமதியான எக்ஸ்ரே ஸ்கனிங் இயங்திரங்களும் அதிக தொழில்நுட்பம் தீயணைப்பு கருவிகளும், 5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஏ.சி இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் இந்த விமான நிலையத்தின் நிர்மாணப்பணிகளுக்கு என 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் செல்வ வளத்தை பழிவாங்கும் வகையில் பயன்படுத்தாதீர்கள் என ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related Posts