புலனாய்வாளர்கள் எனத் தம்மை அறிமுகப்படுத்தி வீடுகளுக்குள் நுழைந்து விவரங்களை சேகரிக்கும் நவடிக்கையில் ஈடுபடுவோரால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கொக்குவிலில் செவ்வாய்க்கிழமை சில வீடுகளுக்கு சென்ற கொச்சைத் தமிழ் பேசும் மூவர் தாம் சி.ஐ.டியினர் என்றும், விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலரைத் தாம் கைது செய்துள்ளனர் என்றும், அவர்கள் தொடர்பான விவரங்களை சேகரிப்பதாகவும் கூறியுள்ளனர்.
சிலர் அவர்கள் சி.ஐ.டியினர்தான் என்பதை நிரூபிக்குமாறும் அவர்களின் அடையாள அட்டையைக் காட்டுமாறும் கேட்டுள்ளனர்.
அடையாள அட்டையைக் காட்ட மறுத்தவர்கள் அவ்வாறு கேட்டவர்களை கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர்.
அத்துடன் குடும்பத்தவர்களின் விவரங்களை முழுமையாகப் பெற்று இளைஞர்கள் சிலரின் வாக்குமூலங்களைப் பெற்றும் சென்றனர் எனக் கூறப்படுகின்றது.