Ad Widget

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக சுமந்திரன் நியமனம் !சுரேஸ் அவுட்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று (1.09.2015) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கௌரவ. இரா. சம்பந்தன் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதுடன், கௌரவ சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் தமிழ்த் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர் கௌரவ. செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் குழுக்களின் பிரதித்தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். இன்றைய கூட்டத்தில் பின்வரும் நியமனங்களும் நிறைவேற்றப்பட்டன.

கட்சியின் கொறடா – கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன். (பா.உ)
பாராளுமன்றக் குழுச் செயலாளர் – கௌரவ. சிவஞானம் சிறீதரன் (பா.உ)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் – கௌரவ. ம. ஆ. சுமந்திரன் (பா.உ)

English
———

The Tamil National Alliance (TNA) Parliamentary Group convened today (1st Sep 2015). Hon. R. Sampanthan was elected as the TNA’s Parliamentary Group Leader at this meeting. It was also decided that Hon. Sampanthan should be appointed as the Leader of the Opposition in Parliament. On this basis TNA MP Hon. Selvam Adaikalanathan accepted appointment to the post of Deputy Chairman of Committees. The following appointments were also made at the meeting today:

Party whip – Hon. Dharmalingam Siddharthan
Secretary, Parliamentary Group – Hon. Sivagnanam Sritharan
TNA spokesman – Hon. M. A. Sumanthiran

Related Posts