இறுதி போரின் போது இலங்கை அரச படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறலுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்.
வடமாகாண சபை அமர்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகிய நிலையில் சபையின் வாயிற் பகுதியில் சிவாஜிலிங்கம் தனது கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார்.
‘சர்வதேச நீதி விசாரணை தொடர வேண்டும்’ ‘ கொலையாளியை நீதிபதியாக நியமிக்க முடியுமா?’ ‘ உள்நாட்டு விசாரணை எமக்கு நீதி பெற்றுத் தராது’ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு சபை உறுப்பினர்கள் எவரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.