யாழ். மாவட்டத்தின் எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப்பதிவுச் சான்றிதழ்களை யாழ் மாவட்ட மக்கள் பெற்றுக்கொள்ள முடியுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2014ஆம் ஆண்டு வரையிலான மாவட்டத்தின் சகல பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப்பதிவுகள் கணனி மயமாக்கப்பட்டுள்ளதுடன் எல்.ஜி.என் வலையமைப்பிலும் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே யாழ் மாவட்டத்தில் வதியும் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப்பதிவுச் சான்றிதழ்களை யாழ் மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களில் எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.