யாழ். மவட்டத்தில் 38ஆயிரம் பட்டதாரிகள் வேலை வாய்ப்புக்கள் இன்றி உள்ளனர் இவர்களுக்கு கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சில் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சிடம் யாழ். அரச அதிபர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளானர்.யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சரிடம் இந்தக் வேண்டுகோளை முன்வைத்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,யாழ். மாவட்டம் கலை, கலாச்சாரத்திற்கு பேர் போன இடம் இந்தக் கலைகளை யுத்த காலத்தில் சரியாக நிர்வகிக்க முடியவில்லை. ஆனாலும் நாமே இக் கலைகளை இனிவரம் காலங்களில் புத்துயிர் பெறச் செய்யவேண்டும்.மறைந்து கிடக்கின்ற கலைகளுக்கு முக்கிய இடத்தினை வழங்கி யாழ் மாவட்ட கலைஞர்களையும், கலைகளையும் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் உயரச் செய்ய வேண்டும்.
அந்த வகையில் யாழ். மாவட்டத்தில் 38 ஆயிரம் வேலையில்லாத பட்டதாரிகள் இருக்கிறார்கள் இவர்கள் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சில் உள்வாங்கப்பட வேண்டும். அவர்களின் மூலம் கலை கலாச்சார நிலையங்களை அமைத்து மறைந்து போன கலைகளை வெளிக் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு இவர்களை உள்வாங்குவதன் மூலம் அவர்களது மனங்களில் சங்கடங்கள் இல்லாத நிலைக்கு உள்படுவதனால் எதிர்காலத்தில் சமாதானமாக வாழ்வதற்கு கலை வழி அமைக்கும்.பிரதேசங்கள் தோறும் கலாசார நிலையங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இக் கலைகளை வளர்க்க அனைவரம் ஒன்றினைய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.