Ad Widget

18 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் விடை கொடுத்தார் சங்கா

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நேற்று இடம்பெற்று வருகின்றது.

sanga

இந்தப் போட்டியே இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார கலந்துகொள்ளும் இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.

எனவே இரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய அவர் 18 ஓட்டங்களுடன் அஸ்வினின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வௌியேறி ஏமாற்றமளித்துள்ளார்.

மேலும் முதலாவது இன்னிங்சிலும் அவர் 32 ஓட்டங்களை மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றுள்ள நிலையில் கடந்த 20ம் திகதி 2வது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அபாரமாக ஆடிய அந்த அணி முதல் இன்னிங்சில் 393 ஓட்டங்களைக் குவித்தது.

பின்னர் தனது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை 306 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதனையடுத்து ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை இடைநிறுத்தியது.

தற்போது இலங்கை அணி 413 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 72 ஒட்டங்களுக்கு இரண்டு இலக்குகளை இழந்துள்ளது.

Related Posts