புலமைப்பரிசில் பரீட்சைக்கு இடையூறுகள் ஏற்படின் அறிவிக்கவும்

நாளையதினம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் காலை 9.30 மணிக்கு முன்னரே பரீட்சை நிலையத்துக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இம்முறை 2,907 பரீட்சை நிலையங்கiளில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் 3,400,930 மாணவர்கள் பரீட்சைக்கு எழுதவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை நடைபெறும் போது ஏதாவது இடையூறுகள் ஏற்படுமாயின் 0112784208, 0112784537 அல்லது 1911 என்ற இலங்கங்களுடன் பரீட்சைகள் திணைக்களத்துக்கும் 0112421111 அல்லது 119 என்ற இலங்கங்களுடன் பொலிஸாருக்கும் அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

Related Posts