நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இரண்டரைப் பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஒரு பெண்ணை கைதுசெய்துள்ளதாகவும் யாழப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
ஆலயத்திற்கு வருகை தந்த பெண்ணிடம் புத்தளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நகைகளை கொள்ளையிட்டுள்ளார்.
சந்தேகநபர் ஆலய வளாகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலயத்திற்கு வருகை தரும் அடியார்களை தங்க நகைகளை அணிந்து வருவதை தவிர்க்குமாறும், தமது உடமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.