இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் சார் பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் க.அருந்தவபாலனின் விருப்பு வாக்கில் மோசடி நடந்துள்ளதாக தென்மராட்சி மக்கள் சமூகம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் முறையீடு செய்துள்ளது.
நேற்று இரவு 8.30 மணியளவில் தென்மராட்சி மக்கள் சமூகப் பிரதிநிதிகள் சுமார் முப் பத்தைந்து பேர் மாவை சேனாதிராஜாவைச் சந்தித்து தமது முறைப்பாட்டை பதிவு செய்தனர்.
முதற்தடவை எண்ணலில் அருந்தவபாலன் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றி ருந்தாராயினும் இரண்டாவது தடவையும் விருப்பு வாக்குகள் எண்ணப்படவேண்டும் என சிலர் வலியுறுத்தியதன் பேரில், 2-வது தடவை வாக்குகள் எண்ணப்பட்ட போது அருந் தவபாலன் ஆறாவது இடத்துக்கு தள்ளப்பட்ட தாகவும் இது திட்டமிட்டு செய்யப்பட்ட சதிவேலை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
குறித்த விருப்பு வாக்குகள் எண்ணுமிட த்தில் கடமையில் இருந்த அதிகாரி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அருந்தவபாலனின் விருப்பு வாக்கில் மோசடி செய்வதில் அந்த அதிகாரி ஈடுபட்டதாக, தென்மராட்சி மக்களின் சமூகப் பிரதிநிதி ஒருவர் மாவை சேனாதிராஜாவிடம் பகிரங்கமாகத் தெரிவித்தார். அருந்தவபாலனுக்கு தேசிய பட்டியலில் இடம் கொடுக்க வேண்டும் என்றும் மாவையிடம் கோரிக்கை விடுத்தனர்.
விருப்பு வாக்கில் ஐந்தாவது இடத்தில் வேட்பாளர் அருந்தபாலன் இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்ட போதிலும் இரண்டாவது முறையும் விருப்பு வாக்கு எண்ணப்பட வேண் டும் என்ற கோரிக்கையை சிலர் முன்வைத்ததைத் தொடர்ந்து, இரண்டாவது எண்ணலின் போது அருந்தவபாலனின் விருப்பு வாக்கு ஆறாவது இடத்துக்கு நகர்ந்தமை தெரிந்ததே.