இலங்கையின் புதிய பிரதமராக ரணில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை மிகவும் எளிமையான நிகழ்வு ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 15ம் நாடாளுமன்றின் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் அமைச்சரவை நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி 15வது நாடாளுமன்றின் முதல் அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts