Ad Widget

பல்கலைக்கழக இணை மருத்துவ பீட மாணவி மரணத்தில் சந்தேகம்! – மீள்விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

யாழ் பல்கலைக்கழக இணை மருத்துவ பீட மாணவி லோறன்ஸ் அனா எப்சிபா கடந்த மாதம் தீக்காயங்களுக்குள்ளாகி மரணமடைந்ததற்கு மருத்துவ பீட விரிவுரையாளர் ஞானகணேஸ் றஜித் (ஜெனா) என்பவர் மீது மாணவியின் பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்களால் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு நேற்று முதல் தடவையாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மாணவியின் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணி திரு. அன்ரன் புனிதநாயகம், கோப்பாய் பொலிசாரினால் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் குறைபாடுகளை அடையாளம் கண்டு அதற்கெதிரான தனது கடுமையான விவாதங்களை முன்வைத்தார்.

அத்துடன் அதிர்ச்சியளிக்கக்கூடிய பல ஆதாரங்களையும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், பொலிசார் அசமந்த போக்காக நடந்துகொண்டதையும் விளக்கி தனது வாதத்தினை முன்வைத்தார்.

அனைத்து விடயங்களையும் கூர்ந்து அவதானித்த நீதிபதி பொலிசாரின் அசமந்த போக்கை கண்டித்து மீள் விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், குறித்த விசாரணை அறிக்கையினை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) நீதிமன்றில் சமர்ப்பிக்கும்படியும் கட்டளை பிறப்பித்தார்.

Related Posts