எந்தவகையில் கடிதம் கிடைத்தாலும் கட்சிக்காரர்கள் தங்களது தீர்மானத்தை எடுத்து முடிந்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை கூட்டமைப்பாக வலுப்படுத்தியவன் தான் என கடவத்த பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
குறித்த கடிதத்தில் உள்ள விடயங்களை ஊடகங்களில் பிரசுரிக்காதிருக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சட்டத்தரணிகள் சங்கம் தேர்தல்கள் ஆணையாளரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளதாக அவர் கூறினார்.
இவ்வாறான கடிதம் மூலம் தேர்தல் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதுடன் அது பாராளுமன்ற தேர்தல் சட்டத்தை மீறும் செயல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிலவேளை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றால் கட்சியின் சிரேஸ்ட தலைவர் ஒருவரை பிரதமராக நியமிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் மூலம் கோரியுள்ளார்.