தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின் உரிமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் அறிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தினத்தன்று இடம்பெறும் தேர்தல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல்களை தடுப்பதற்காக விசேட அலகொன்றை தாபிக்க தீர்மானித்துள்ளது.
அவ் அலகில் ஆணையாளர்கள், செயலாளர் மற்றும் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் சிலரும் அடங்குவர்.
இவ் விசேட அலகு தேர்தல் தினத்தன்று பி.ப 04.00 மணி வரை இயங்கும், ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் 1996 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ளவும்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிரிவிலும் வாக்காளர்கள் முறைப்பாடுகளை செய்வதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வட மாகாணத்திலுள்ள வாக்காளர்கள் 021 -2222021 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ளவுமாறும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.