எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக ஏற்பாடாகியிருந்த வாக்களிப்பு நிலையங்களில் 13 நிலையங்களின் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தனபாலசிங்கம் அகிலன் தெரிவித்தார்.
புங்குடுதீவு சித்தி விநாயகர் மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையம், புங்குடுதீவு சேர் துரைச்சாமி வித்தியாலயத்துக்கும் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் இருந்த இரண்டு வாக்களிப்பு நிலையங்கள், உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயத்துக்கும் உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயத்தில் இருந்த இரண்டு வாக்களிப்பு நிலையங்கள், உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்துக்கும் மாற்றப்பட்டுள்ளன.
அத்துடன், சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலிருந்த வாக்களிப்பு நிலையம், சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலைக்கும் செங்குந்தா இந்துக் கல்லூரியில் இருந்த இரண்டு வாக்களிப்பு நிலையங்கள், கல்வியங்காடு இந்துத் தமிழ் கலவன் பாடசாலைக்கும் அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாலயத்திலிருந்து வாக்களிப்பு நிலையம், பூம்புகார் தமிழ்க் கலவன் பாடசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளது.
புனிய ஜேம்ஸ் பெண்கள் ஆரம்பப் பாடசாலையில் இருந்த வாக்களிப்பு நிலையம், புனிய ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலைக்கும், புனித ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையிலிருந்த வாக்களிப்பு நிலையம், புனித ஜேம்ஸ் பெண்கள் ஆரம்பப் பாடசாலைக்கும், ஆனைப்பந்தி மெதடிஸ்த மிசன் வித்தியாலயத்திலிருந்த இரண்டு வாக்களிப்பு நிலையங்கள், வண்ணார்பண்ணை நாவலர் வித்தியாலயத்துக்கும் மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.