கல்விப்பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை நடைபெற்றுகொண்டிருக்கின்ற பரீட்சை மத்தியநிலையத்துக்குள் அலைபேசியை எடுத்துச்சென்ற மாணவர்கள் இருவருக்கு பரீட்சை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள பாடசாலையொன்றில் பரீட்சை மத்தியநிலையமாக தொழிற்படும் மத்தியநிலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருவரே இவ்வாறு அலைபேசியை எடுத்துச்சென்றுள்ளனர்.
அவ்விருவர் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி பரீட்சைகள் சட்டத்தின் பிரகாரம் ஆகக்கூடுதலான தண்டனை வழங்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
பரீட்சை மண்டபத்துக்குள் அலைபேசியை எடுத்துச்செல்வது தடையாகும். அவ்வாறு அலைபேசியை எடுத்துச்செல்லுகின்ற பரீட்சார்த்திகளை கண்டால் அவர்கள் தொடர்பில் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னரேனும் பரீட்சைகள் திணைக்களத்துக்கு தகவல் தருமாறு ஏனைய பரீட்சார்த்திகளிடம் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.