மாவிட்டபுரம் ஶ்ரீ கந்தசுவாமி கோவில் ஆடிக் கார்த்திகை பெருவிழா இன்று (08) சனிக்கிழமை அதிகாலை 05 மணிக்கு நடைபெறவுள்ளது. உசத் கால பூசையுடன் ஆரம்பமாகி இரவு 09 மணிவரை இப்பூசை நிகழ்வு நடைபெறவுள்ளது.
அவ்வகையில், காலை 07 மணிக்கு ஸ்நபனாபிஷேகமும் விசேட மேளக்கச்சேரியும் நடைபெற்று, 08 மணிக்கு காலை சந்திப்பூசை விசேட மேளக் கச்சேரியும் 08.30 மணிக்கு கதாப் பிரசங்கம் பஜனை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
அதனைத் தொடர்ந்து 10 மணிக்கு மென்டலின் கச்சேரியும் தொடர்ந்து 12 மணிக்கு வீணைக் கச்சேரியும் சண்முக அர்ச்சனையும் இடம்பெறும். 03 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் அதனைத் தொடர்ந்து கார்த்திகைக் குமரன் வௌி வீதியுலா வரும் நிகழ்வும் இடம்பெறும். 6 மணிக்கு இரண்டாம் கால பூசையை தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை திருக்குமரன் வௌிவீதி உலாவும் இடம்பெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.