அரசின் பொதுச் சேவை நிறுவனங்களிலுள்ள வெற்றிடங்களை நிரப்பும் முகமாக 7500 பட்டதாரிகளை உள்வாங்கி வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அரசு தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே தகுந்த அமைச்சரவை அமைச்சர்களால் இது தொடர்பில் எடுக்கபட்ட முடிவுகளை தொடர்ந்து எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் இந்த உள்வாங்கல்கள் இடம்பெறவுள்ளது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பினை வழங்குவது தொடர்பில் வௌியிட்ட அறிக்கையில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது.
அவ்வகையில் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னர் தமது பட்டப்படிப்பினை முடித்த அனைத்து பட்டதாரிகளும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். அத்துடன் கடந்த காலங்களில் நிலவிய சில கட்டுப்பாட்டு காரணங்களால் தமது பதிவினை மேற்கொள்ள முடியாதவர்களும் தற்போது புதிய அரசாங்கத்திடம் கோரிய வேண்டுகோளுக்கிணங்க அவர்களும் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள வெற்றிடங்களில் ஆகஸ்ட் 17 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலுக்கு பின்னர் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
நியமனம் செய்யப்படுகின்ற அனைத்து பட்டதாரிகளும் ஒருவருட பயிற்சி நெறிக்குட்படுத்தப்பட்டு அதன் பின்னர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.