மன்னார் – மாந்தை மேற்கு – இலுப்பக்கடவை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட – கோவில்குளம் கிரமப் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சந்தேகநபர் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவரின் வாக்குமூலத்தின் பிரகாரம், அப்பெண்ணின் கணவன் வெளிநாட்டுக்குச் சென்றதும் , மேற்படி இருவரும் கள்ளத்தொடர்பை பேணி வந்துள்ளதுடன் சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் கொழும்புக்கு வந்துள்ளனர்.
ஆமர்வீதி , கந்தானை பிரதேசங்களில் வாழ்ந்து வந்துள்ள இவர்கள் ஆரம்பத்தில் கந்தானையில் அமைந்துள்ள கோழிப் பண்ணையொன்றில் வேலைசெய்துள்ளனர். பின்னர் அப்பெண்ணுக்கு ராகம வைத்தியசாலையில் குழந்தையொன்று பிறந்துள்ளது. அக்குழந்தையை வைத்தியசாலையில் வைத்துவிட்டு தப்பியுள்ளனர்.
தொடர்ந்து இருவரும் திவுலப்பிட்டியவில் மற்றுமொரு கோழிப் பண்ணையில் வேலை செய்துள்ளனர்.
இந்நிலையில் அக் கோழிப் பண்ணை உரிமையாளருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து இருவரும் அங்கிருந்து வெளியேறி கொழும்பு செட்டியார் தெரிவில் உள்ள தற்காலிக விடுதிக்கு கடந்த மாதம் 22 ஆம் திகதி வந்துள்ளனர். அங்கு இருவரும் அம்மாதம் 29 ஆம் திகதி வரை தங்கியுள்ளனர்.
இதன் பின்னர் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது, முன்னர் வேலை செய்த பண்ணைக்கு திரும்பி செல்வது தொடர்பிலேயே இம்மோதல் இடம்பெற்றுள்ளது.
பின்னர் அந்நபர் தாக்கியதில் அப் பெண் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சடலத்தை பயணப்பொதியில் வைத்து புறக்கோட்டை- பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். வுனியாவில் இருக்கும் சகோதரியின் வீட்டுக்கு கொண்டு செல்லும் பொருட்டே அவர் அங்கு சென்றுள்ளார். குறித்த பயணப் பொதிக்கு மேலதிகமாக மேலும் இரு பயணப் பொதிகளையும் அவர் கொண்டுசென்றுள்ளார்.
சடலம் அடங்கிய பயணப்பொதி பாரம் அதிகமென்பதால் அதனை பஸ் தரிப்பிடத்தில் வைத்துவிட்டு , பஸ்கள் இருக்கின்றனவா என்பதனை தெரிந்து கொள்வதற்கு வவுனியா பஸ்கள் நிறுத்தி வைக்கும் இடத்துக்கு சென்றுள்ளார்.
அவர் அங்கு சென்று பயணப்பொதியை மீள எடுப்பதற்கு திரும்பும் வேளையில் தனது பயணப்பொதியை சூழ பொதுமக்களும் , பொலிஸாரும் நின்றுகொண்டிருப்பதை அவர் கண்டுள்ளார்.
இதனையடுத்து பயத்திலேயே அங்கிருந்து வவுனியாவில் உள்ள சகோதரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மன்னாரில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளதுடன் அங்கு மேசனாக பணியாற்றிவந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்தி
கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யாழ்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்
புறக்கோட்டையில் பயணப் பொதியில் தமிழ் பெண்ணின் சடலம் – அடையாளம் காண பொது மக்களிடம் உதவி கோரல்