தமிழீழக் கோரிக்கையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை! – விஜயகலா

தான் ஒருபோதும் தமிழ்ஈழக் கோரிக்கையை ஆதரிக்கவில்லையென்றும், எதிர்காலத்திலும் அதனை ஆதரிக்கப் போவதில்லையென்றும் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் ஈழம் வரைபடத்தைக் கொண்டதான எனது தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த 65-9815 என்ற இலக்கத்தகடு உடைய வாகனத்தை பயன்படுத்தியதாக தனக்கு எதிராக தேர்தல்கள் செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாகவும் விஜயகலா மகேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது விடயம் தொடர்பில் அவர் கட்சியின் செயலாளருக்கு விளக்கக் கடிதமொன்றையும் அனுப்பி வைத்திருந்தார். மிதக்கும் வாக்குகள் எனது பக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை சகித்துக்கொள்ளாத சில சக்திகள் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன.

தமிழர்களின் தாயகப் பகுதியை வேறுபடுத்திக்காட்டும் வரைபடத்துடன் தமது தரப்பு வேட்பாளர்களின் படங் களையும் உள்ளடக்கிய போலியான பிரசாரங்களை மக்கள் மத்தியில் சிலர் முன்னெடுத்திருப்பதாகவும், தென்னிலங் கையில் இனவாதத்தை தூண்டும் நோக்கில் இவ்வாறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்ற வரைபடத்தை பின்னணியாகக் கொண்டு எனது படத்தையும் உள்ளடக்கி இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமக்கு அதிகரித்து வரும் ஆதரவை ஜீரணித்துக் கொள்ள முடியாத தரப்பினரே எமக்கு எதிராக இவ்வாறான போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். நாம் ஒரு போதும் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவளிக்க வில்லை. இனிமேலும் ஆதரிக்கப்போவதில்லை.

ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினை எதிர்காலத்தில் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். எமக்கு எதிராக திட்டமிட்டு முன்னெடுக் கப்படும் இவ்வாறான பிரசாரங்களுக்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை. இதனை நான் முற்றாக மறுக்கின்றேன். இதனை நாம் வன்மையாகக் கண்டிக் கின்றோம். இலங்கையில் சிங்கள மக்களைப் போன்ற சகல இன மக்களும் சமமான அந்தஸ்துடன் வாழவேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

ஐ.தே.கவின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களும் மூடப்படும் என நான் கூறியதாக நாகவிகாரையின் பிரதம மதகுரு கொழும்பில் கருத்து வெளியிட்டுள்ளாரென ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இவ்வாறானதொரு கூற்றை நான் கூறவில்லை. இனவாதத்தைத் தூண்டும் வகையிலான இவ்வாறான தவறான செய்திகள் மற்றும் பிரசாரங்கள் குறித்து தேர்தல்கள் ஆணை யாளருக்கு தெரியப்படுத்தியிருப் பதாகவும் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட் டுள்ளார்.

Related Posts