இந்துக் கோவில் பராமரிப்பில் அரசாங்கம் தலையிடக்கூடாது

இந்துக்கோவில் பராமரிப்பு பணிகளில் அரசாங்கம் தலையிடக்கூடாது.அப்பணியை கோவில் தர்மகர்த்தாக்கள்,தர்மகர்த்தா சபைகள் தான் மேற்கொள்ள வேண்டும் என இந்து மதம்,மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நல்லூர் ஸ்ரீ துர்க்காமணி மண்டபத்தில் இந்து ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பழம் பெரும் கோவில்கள் பல இருக்கின்றன.அவைகளை எல்லாம் வளர்த்து விடும் சந்தர்ப்பம் எம்கையில்தான் உள்ளது.அதற்கு முக்கியமாக சிரேஷ்ட இந்து குருமார்கள் எமக்கு வழிகாட்ட வேண்டும்.

அதற்கு ஏற்றாற்போல் இந்து மதத்தினர் வாழவேண்டும்.எந்த மதத்தினராக இருந்தாலும் இறைவனுடைய சொத்தை நாம் பராமரிக்க வேண்டும். அப்பராமரிப்பை உங்களால் முடியும் வரை செய்யுங்கள்.

இந்து மதத்தை வளர்க்க வேண்டும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரவேண்டும்.அதற்கு நாம் ஒவ்வொரு வரும் பணியாற்றவேண்டும். இது எம் ஒவ்வொருவருடைய கடமையும் ஆகும்.

தமிழன் என்ற அடிப்படையில் தமிழனுக்காக கடமைகள் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts