க.பொ.த (உ/த) பரீட்சை இன்று ஆரம்பம்! பரீட்சைக்குத் தோற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

க.பொ.த உயர்தர பரீட்சையில் முதலாம் கட்டம் இன்று (04) ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இப்பரீட்சைக்கென பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக சுமார் மூன்றரை இலட்சம் பேர் தோற்றுகின்றனர். இவர்களுக்கென நாடு தழுவிய ரீதியில் 1800 க்கு மேற்பட்ட பரீட்சை மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பரீட்சையின் முதலாம் கட்டம் இன்று (04) முதல் 13 ஆம் திகதி வரையும் , இரண்டாம் கட்டம் ஆகஸ்ட் மாதம் 24 முதல் செப்டம்பர் 08 ஆம் திகதி வரையும் இடம்பெறும். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு இவ் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் e-jaffna வின் வாழ்த்துக்கள்!

Related Posts