வருமானத்துக்காக இனமானதையும் தன் மானத்தையும் விற்பதற்கு தமிழர் விடுதலை கூட்டணி ஒரு போதும் தயாராக இல்லை என்பதை இந்த வேளையில் தெரிய படுத்தி கொள்கின்றேன் என கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் தமிழர் விடுதலை கூட்டணி வேட்பாளர் நாகேந்திரன் டர்ஷன் தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் வேறு ஒரு மாவட்டத்தில் போட்டியிட்டு தோற்றதன் பின்னர் தேசிய பட்டியலில் தனக்கு ஆசனம் தருமாறு கோரி அதுவும் கிடைக்காத நிலையில் அரசியல் வங்குரோத்து நிலையில் காணப்பட்டவர் இன்று கட்டட கொந்துரதுக்காறரை உள்வாங்கி எந்த கட்சி தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்க மறுத்ததோ அந்த கட்சியுடன் இணைந்து போட்டியிட விளைவது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் அன்றி வேறில்லை.
உண்மையில் கொழும்பு வாழ் மக்கள் மீது இவருக்கு அக்கறை இருந்திருந்தால் அன்றே இன்னொரு மாவட்டத்தில் போட்டியிடாமல் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருக்கலாம். மாறி மாறி இடம் தாவுவது மட்டுமல்ல மக்களையும் ஏமாற்ற முனைவதை எம்மால் பார்த்துகொண்டு இருக்க முடியாது. இதற்கு மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்பதை இந்த வேளையில் தெரிவித்து கொள்கின்றேன். என்னை பொறுத்தவரையில் தலைவனாக இருப்பதை விட தொண்டனாக இருப்பதையே கூடுதலாக விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.