தபால் மூல வாக்களிப்பு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்களிப்பு நிலையத்தினருகில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நேர்ந்தால், வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டு அல்லது வற்புறுத்தப்பட்டால் குறித்த இடத்தின் வாக்கெடுப்பு உடன் ரத்துச் செய்யப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் வேட்பாளர்களின் பதாதைகளை காட்சிப்படுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயலாகும் என தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர், வாக்களிப்பு சுமூகமாக நடைபெறுவதற்கு கட்சிகள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
வாக்காளர்கள் எவ்வித அச்சமும் சிரமும் இன்றி சுதந்திரமாக தமது வாக்குகளை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.