இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இரண்டாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த யாழ் இந்துக் கல்லூரி அணியினர் இன்றைய நாளின் முதல் ஓவரிலேயே தமது 4வது விக்கட்டினை இழந்தனர். சிந்துஜன் 09 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்திருந்தார்.
தொடர்ந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் 51 ஓட்டங்களை பெற்றிருந்த ஜஸ்மினன் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 144 பந்து வீச்சுக்களில் 14 நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 127 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இது இந்துக்களின் போர் துடுப்பாட்ட போட்டிகளில் பெறப்பட்ட 2வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. அணித்தலைவர் கிருசோபன் 8 நான்கு ஓட்டங்கள் 1ஆறு ஓட்டம் உள்ளடங்கலாக 73 பந்துகளை எதிர்கொண்டு 65 ஓட்டங்களை பெற்றார். இவர்களின் சிறந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன் யாழ் இந்துக் கல்லூரி அணியினர் 316 ஓட்டங்களுக்கு 8 விக்கட்டுகளை இழந்த நிலையில் தமது இன்னிங்சை நிறுத்திக்கொண்டனர்.
இவர்கள் தவிர
கல்கோகன் 06 காயம் காரணமாக விலகல்
சஜீகன் 00
ருக்ஸ்மன் 00
சிந்துஜன் 09
சஜீவன் 00
வாமனன் 14
நிலாஜனன் ஆட்டமிழக்காமல் 07
பிருந்தாவன் ஆட்டமிழக்காமல் 05
உதிரி ஓட்டங்கள் 19
மொத்த ஓட்டங்கள் 316-8 Declared
பந்து வீச்சில் கொக்குவில் இந்துக்கல்லூரி அணி சார்பில் :
பவிதரன் 17 ஓவர்கள் 72 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும்
ராகுலன் 15 ஓவர்கள் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும்
சிலோஜன் 8 ஓவர்கள் 43 ஓட்டங்களுக்கு 1 விக்கட்
பங்குயன் 7 ஓவர்கள் 42 ஓட்டங்களுக்கு 1 விக்கட்
பார்த்தீபன் 8 ஓவர்கள் 27 ஓட்டங்களுக்கு 1 விக்கட்
யாழ் இந்துக் கல்லூரி அணியை விட 41 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த கொக்குவில் இந்துக்கல்லூரி அணியினர் மதிய போசன இடைவேளையை தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆரம்பித்தனர்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே இழந்த கொக்குவில் இந்துக்கல்லூரி அணியினர் போட்டி நிறைவடையும் போது 8 விக்கட்டுகளை இழந்து 265 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.
அணி சார்பில் அணித்தலைவர் பங்குஜன் 5 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 22 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தார்.இவருடன் சிலோஜன் 71 பந்துவீச்சுகளில் 2 நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 44 ஓட்டங்களையும், ராகுலன் 87 பந்து வீச்சுகளில் 8 நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 82 ஓட்டங்களையும், ஆதித்தன் 30 பந்துவீச்சுகளில் 4 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 47 ஓட்டங்களையும் பெற்றனர்
இவர்கள் தவிர
கீர்த்திகன் 03 ஓட்டங்கள்
சத்தியன் 07 ஓட்டங்கள்
பங்குயன் 22 ஓட்டங்கள்
சிலோஜன் 44 ஓட்டங்கள்
ராகுலன் 82 ஓட்டங்கள்
ஆதித்தன் 47 ஓட்டங்கள்
ஜனுதாஸ் 08 ஓட்டங்கள்
திவாகர் 25 ஓட்டங்கள்
நிசாந்தன் ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்கள்
பார்த்தீபன் ஆட்டமிழக்காமல் 00 ஓட்டங்கள்
உதிரி – 16 ஓட்டங்கள்
பந்து வீச்சில் யாழ் இந்துக்கல்லூரி சார்பில்
சிந்துஜன் 19 ஓவர்களில் 64 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகள்
ருக்ஸ்மன் 13 ஓவர்களில் 74 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகள்
நிலாஜனன் 4 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு 1 விக்கட்
5வது இந்துக்களின் போர் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறந்த துடுப்பாட்டக்காரருக்கான விருது கொக்குவில் இந்துக் கல்லூரி அணித்தலைவர் பங்குயனுக்கு வழங்கப்பட்டது.இவ்விருது 127 ஓட்டங்களை பெற்ற யாழ் இந்து வீரர் ஜஸ்மினனுக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும் என பின்னர் அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டிரந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பின் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது யாழ் இந்துக் கல்லூரியின் ஆரம்ப பந்துவீச்சாளரான சிந்துஜனுக்கு வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து இப் போட்டியின் ஆட்டநாயகனுக்கான விருது யாழ் இந்துக் கல்லூரியின் ஜஸ்மிமனுக்கு வழங்கப்பட்டது.அத்துடன் இப்போட்டிக்கு உதயன் பத்திரிகையால் அறிவிக்கப்பட்ட சிறந்த சதம் பெறும் வீரனுக்கான ரூபா 25000 பணப்பரிசிலும் ஜஸ்மினனுக்கு வழங்கப்பட்டது.பின் இறுதியாக, ஆட்டம் சமநிலையில் முடிவடைந்ததால் இப்போட்டிக்கான வெற்றிக் கிண்ணத்தை இரு அணித்தலைவர்கள் கையிலும் பிரதம விருந்தினர்கள் வழங்கினர்.