நாட்டுக்கு நான் செய்த குற்றம்தான் என்ன? – மக்களிடம் கேட்கிறார் மஹிந்த

நாட்டை யுத்தத்தில் இருந்து மீட்டதா அல்லது நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டு சென்றதா நான் செய்த குற்றம்? – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்‌ஷ

அம்பாந்தோட்டை – வலஸ்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் நான் நாட்டை விட்டு ஒடவில்லை. மீண்டும் என்னுடைய சொந்த இடத்துக்கே சென்றேன் – என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் எப்போதும் மக்களை மறந்ததில்லை. பஸில் ராஜபக்‌ஷ ஓர் அரசியல்வாதி என்பதால் அவர் சிறைக்கு சென்றது பிரச்சினையில்லை.

எனினும், நிதிக் குற்றச்சாட்டின் பெயரிலேயே அவர் சிறைக்குச் சென்றுள்ளார். ஆனால், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் தொடர்பில் இன்னமும் விசாரணை நடத்தவில்லை.

ராஜபக்‌ஷாக்களை அழிக்க வேண்டும், வெட்டவேண்டும், குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என் மேடைகளில் ரணில் பேசுகின்றார். நாங்கள் செய்த குற்றம்தான் என்ன? நாட்டை யுத்தத்தில் இருந்து மீட்டதா? அல்லது நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் சென்றதா? – என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Related Posts