சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர், போன்றவற்றில் தினமும் 2 மணி நேரத்திற்கு மேல் நேரத்தை செலவிடுபவர்களுக்கு மனோநோய் ஏற்படுவதோடு அவர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆபத்து இருப்பதாகவும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
கனடாவில் உள்ள ஒட்டாவா பொது சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த ஹியூக் சம்பாசா கன்யிங்கா மற்றும் ரொசாமண்ட் லூயிஸ் என்ற ஆராய்ச்சியாலர்கள் இது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
அவர்களது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதாவது:-
7 வயது முதல் 12 வயது வரை உள்ள சுமார் 25 சதவீத குழந்தைகள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கும் அதிகமாக சமூக வலை தளங்களில் தங்களின் நேரத்தைச் செலவிடுகிறார்கள்.
இந்த சமூக வலைத்தளங்கள் மூலம் பெற்றோர்களுக்கு முக்கியமான செய்திகளை அனுப்புதல், குழதைகளின் மனநல மேம்பாட்டுக்கு உதவும் கருத்துக்கள் பரவவேண்டும். குழந்தைகளில் பலர் இந்த சமூகவலைதளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதால், அதே வலைதளங்களில் அவர்களின் ஆரோக்கியத்தை மையப்படுத்திய திட்டங்களைக் கொண்டு சேர்க்க முயற்சிக்க வேண்டும்.
எனினும், சிலருக்கு இதே சமூக வலைதளங்கள் பிரச்சினையாக இருக்கும் போது, வேறு சிலருக்கு தீர்வாகவும் இருக்கின்றன. இந்த ஆய்வுக் கட்டுரை ‘சைபர் சைக்காலஜி, பிஹேவியர் அண்ட் சோஷியல் நெட்வொர்க் கிங்’ எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.