அக்குரஸை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் கையைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படும் எச்.எஸ்.ஜீ.சமிந்த என்பவர், மாத்தறையின் நேற்று (24) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.
அக்குரஸையை வசிப்பிடமாகக் கொண்ட அவர், மேற்படி சம்பவம் தொடர்பில் கூறியதாவது,
‘அந்த கூட்டம் இடம்பெற்ற போது நான் கொஞ்சம் மதுபோதையில் இருந்தேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டதும் நான் இருந்த இடத்தையே மறந்துவிட்டேன்.
நான் அவருடைய கையைப் பிடித்து இழுத்தேன். பாதுகாப்பு தரப்பினர் மற்றொரு பக்கம் இழுத்தனர். சனக்கூட்டத்துக்கு மத்தியில் பாரிய நெரிசல் ஏற்பட்டது. என்னால் ஏற்பட்ட சங்கடத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றேன்’ என்று கூறினார்.